சிறுமி விற்பனை விவகாரம்! – 4 இணையத் தளங்களுக்குத் தடை!!
கல்கிசை பகுதியில் 15 வயதான சிறுமியொருவரை பாலியல் செயற்பாடுகளுக்காக இணையத்தளத்தின் ஊடாக விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்ட 4 இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
மகளிர் மற்றும் சிறுவர் பிரிவால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
Leave a comment