Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

Share

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு விசேட டிஜிட்டல் அங்குரார்ப்பண நிகழ்வை நாளை (04) கட்சியின் தலைமையகமான ‘சிறிகொத்த’வில் நடத்தவுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில், ‘டிஜிட்டல் வார்டு ஒருங்கிணைப்பாளர்கள்’ (Digital Ward Coordinators) நியமனம் நாளை ஆரம்பிக்கப்படும். முதற்கட்டமாக 1,000 அதிகாரிகளுக்கு அன்றைய தினம் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

கட்சி உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்தவும், தகவல்களை விரைவாகப் பரிமாறவும் புதிய ‘UNP App’ விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு அங்கமாக, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் எலான் மாஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ அதிவேக செயற்கைக்கோள் இணைய வசதி நாளை உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கப்படவுள்ளது.

கட்சியின் செயல்பாடுகளை மிகவும் வினைத்திறனானதாகவும், வேகமானதாகவும் மாற்றுவதோடு, அடிமட்டத் தொண்டர்களுடன் டிஜிட்டல் தளங்கள் ஊடாக நெருக்கமான தொடர்பைப் பேணுவதே இந்த நவீனமயமாக்கலின் முக்கிய நோக்கமாகும் எனப் பிரதிப் பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...