சிஐடி மற்றும் எஃப்சிஐடியில் ராஜபக்ச குடும்பத்தினர்: ஷிரந்தி மற்றும் நாமல் இன்று முன்னிலை!

OMugyjDW

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்று (03) வெவ்வேறு பொலிஸ் பிரிவுகளில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் ‘சிறிலிய சவிய’ (Siriliya) அமைப்பின் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 27-ஆம் திகதி அவர் அழைக்கப்படிருந்த போதிலும், மருத்துவக் காரணங்களால் சமூகமளிக்கவில்லை. இதனால் இன்று (பெப். 03) காலை 9:30 மணியளவில் முன்னிலையாகுமாறு மீளவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

நாமல் ராஜபக்ச திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்புகள் மற்றும் ஏனைய சில குற்றவியல் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் இன்று சிஐடி-யில் ஆஜராகியுள்ளார்.

இந்திய விஜயம் காரணமாக ஏற்கனவே வழங்கப்பட்ட திகதியில் அவர் சமூகமளிக்காத நிலையில், இன்று முன்னிலையாகியுள்ளார்.

 

 

Exit mobile version