கொரோனாவுக்கு காய்ச்சல் தடிமன் மட்டும் அறிகுறி அல்ல!- பொது வைத்திய நிபுணர் விளக்கம்!!
கொரோனாவுக்கு காய்ச்சல், தடிமன் மாத்திரம் அறிகுறி அல்ல. வயிற்றோட்டம், மூக்கடைப்பு, மூச்சுக் கஷ்டம், மூக்கால் தண்ணி வடிதல், உடல் இயலாமை போன்றவையும் அறிகுறியாகவே கொள்ளப்படும் என பொது வைத்திய நிபுணர் கஜந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் டெல்டா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர் என்று தெரிவித்த அவர் இதுவரை யாழ்ப்பாணத்தில் 176 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறினார்.
ஒரு வாரத்தில் ஒரு கொரோனா மரணம் ஏற்பட்ட யாழ்ப்பாணத்தில் தற்போது நாள்தோறும் கொரோனா மரணம் ஏற்பட்டு வருகின்றது.
இரண்டு, மூன்று நாள்களுக்கு மேல் அதிகமாக காய்ச்சல் காணப்படல், நீர் அருந்த கஷ்டம், சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் வைத்தியசாலையை நாடுவது சிறந்தது.
தடுப்பூசி போட்டால் கொரோனா பரவாது என்பது இல்லை. ஆனால் தடுப்பூசியை செலுத்துவதன் மூலம் தீவிரமாக கொரோனா பரவுகின்ற சந்தர்ப்பங்கள் குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
Leave a comment