கைதிகளுக்கு புதிய சிகிச்சை நிலையங்கள்!
கொவிட் தொற்றுக்குள்ளாகும் கைதிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக புதிய சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
தல்தென, பல்லேகல, அம்பேபுஸ்ஸ மற்றும் அங்குணகொலபெலஸ்ஸ ஆகிய பகுதிகளில் சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன என்று சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகும் கைதிகள் இதுவரை இயக்கச்சி மற்றும் வட்டரக்க சிகிச்சை நிலையங்களுக்கே அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இதேவேளை, கொரோனாத் தொற்று அதிகரித்து செல்வதால், சிறைச்சாலைகளில் ஏற்படும் இட நெருக்கடியை குறைத்துக்கொள்வதற்காகவே இவ்வாறு புதிய சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
Leave a comment