செய்திகள்உலகம்

கேமரா வேண்டாமே! உங்களைப் போன்றே பேசும் AI உருவம்: யூடியூப்பின் அதிரடி மாற்றங்கள்!

Share

யூடியூப் நிறுவனம் தனது தளத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) இன்னும் ஆழமாகப் புகுத்தத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளை யூடியூப் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் மோகன் வெளியிட்டார்.

இனி படைப்பாளர்கள் கேமரா முன்னால் நிற்காமலேயே, தங்களைப் போன்றே தோற்றமளிக்கும் ஒரு ‘AI உருவத்தை’ உருவாக்கி, அதன் மூலம் Shorts காணொளிகளைத் தயாரிக்க முடியும்.

இது ஓபன் ஏஐ நிறுவனத்தின் ‘Sora’ செயலி போன்ற ஒரு தொழில்நுட்பமாகும்.

வெறும் எழுத்து வடிவிலான கட்டளைகளை வழங்குவதன் மூலம் இந்த காணொளிகளை உருவாக்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. “AI என்பது படைப்பாளர்களின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக இருக்குமே தவிர, அவர்களைப் பதிலீடு செய்யும் ஒன்றாக இருக்காது” என்று நீல் மோகன் உறுதியளித்துள்ளார்.

மேலும், வெறும் எழுத்துக்கள் மூலம் சிறிய கேம்களை உருவாக்குதல் மற்றும் இசையில் புதிய சோதனைகளைச் செய்தல் போன்ற வசதிகள் புதிதாக உட்புகுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் (Instagram Reels) உள்ளது போல, இனி யூடியூப் ஷார்ட்ஸ் பகுதியிலும் புகைப்படங்களை (Image Posts) பதிவேற்றலாம்.

இவை நேரடியாக சந்தாதாரர்களின் பீடில் (Feed) தோன்றும். பெரிய திரையில் (TV) யூடியூப் பார்ப்பவர்களுக்கு ஒரே நேரத்தில் பல அலைவரிசைகளைப்பார்க்கும் வசதியை நமக்கு விருப்பமான முறையில் மாற்றியமைத்துக் கொள்ளக் கூடிய வகையில் உருவாக்கப்படவுள்ளது.

அத்தோடு, விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் செய்திகளுக்காக 10-க்கும் மேற்பட்ட பிரத்தியேகமான ‘YouTube TV’ திட்டங்கள் அறிமுகமாகவுள்ளன.

மேலும், படைப்பாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஒருவரது அனுமதியின்றி அவரது உருவத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலியான (Deepfake) காணொளிகளை கண்டறிந்து அகற்றும் தொழில்நுட்பத்தையும், காவல்துறை முறைப்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு அமைய யூடியூப் பலப்படுத்தி வருவதாகவும் நீல் மோகன் தெரிவித்துள்ளார்

 

 

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...