குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட முகக்கவசம் அணியலாம்!!
குழந்தைகளுக்கு கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட முகக்கவசம் அணியலாம் என யாழ். போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் கணேசலிங்கம் அருள்மொழி தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால் குழந்தையில் சோர்வு, சிறுநீர் வெளியேறும் அளவு குறையும், நீர் ஆகாரங்களில் விருப்பமின்மை, வாந்தி மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் ஆகியவை அறிகுறிகளாகக் காணப்படும்.
ஆகவே இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a comment