கிளிநொச்சி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!! மற்றொருவர் படுகாயம்!!
கிளிநொச்சியில், ஏ-9 வீதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (22) பிற்பகல் கிளிநொச்சி, 155ஆம் கட்டைப் பகுதியில் நடந்துள்ளது.
தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ஹையேஸ் வாகனம் ஒன்று, எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய ஹையேஸ் வாகனச் சாரதி கிளிநொச்சிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Leave a comment