கர்ப்பிணிகளுக்கு கொவிட் – குழந்தைகளின் நுரையீரலைப் பாதிக்கும் அபாயம்!!

1800x1200 pregnant woman and gynecologist other

கர்ப்பிணிகளுக்கு கொவிட் – குழந்தைகளின் நுரையீரலைப் பாதிக்கும் அபாயம்!!

கர்ப்பிணியொருவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானால் பிறக்கும் குழந்தைக்கு நுரையீரல் மற்றும் மூளைப் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன என பிரசவம் மற்றும் நரம்பியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சமிந்த மாதொட்ட தெரிவித்தார்.

இவ்வாறான நிலைமையில் தடுப்பூசியைப் பெறாமல் இருப்பது கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பற்றது. எனவே ஸ்புட்னிக் தவிர்ந்த ஏனைய எந்தவொரு தடுப்பூசியையும் கர்ப்பிணிகள் நிச்சயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர் சமிந்த மாதொட்ட தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாவது அவர்களுக்கு மாத்திரமின்றி பிறக்கவுள்ள குழந்தையின் உயிருக்கும் அச்சுறுத்தலாகும் எனக் கூறினார்.

கர்ப்பிணிகள் தொற்றுக்கு உள்ளானால் குறிப்பிட்ட தினத்துக்கு முன்னரான பிரவசம் அல்லது குழந்தை இறக்கக்கூடிய அபாயம் அதிகமுள்ளது. உரிய தினத்துக்கு முன்னரே பிரசவம் இடம்பெற்றால் பிறக்கும் குழைந்தைக்கு நுரையீரல் மற்றும் மூளை பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன எனவும் தெரிவித்தார்.

 

Exit mobile version