கனடாவில் விரைவில் இடைக்கால தேர்தல்!!
இடைக்கால பொதுத்தேர்தலொன்றுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.
செப்டம்பர் 20 ஆம் திகதி இந்த பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
திட்டமிடப்பட்ட பொதுத்தேர்தலுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாக இந்தத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
ஆளும் லிபரல் அரசாங்கத்துக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாமலிருந்த நிலையில், பெரும்பான்மையை பெறக்கூடிய நிலை தற்போது காணப்படுகின்றது என கருத்துக்கணிப்புகள் வௌிப்படுத்திய நிலையிலேயே இந்த பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான போராட்டத்தை எவ்வாறு நிறைவு செய்வது என்பதை கனேடியர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.
Leave a comment