கஜேந்திரகுமாருக்கும் கொரோனாத் தொற்று
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனக்கும், தனது மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டநிலையில், இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தமக்கு கொரோனாத் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாள்களாக தங்களோடு தொடர்பில் இருந்தோர் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், ஏற்கனவே தம்மைத் தனிமைப் படுத்திக்கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.