images 1 9
செய்திகள்இலங்கை

எல்டோ தர்மே வாள் குழுவின் மூன்று உறுப்பினர்கள் சிக்கினர்: போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல்!

Share

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவன் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான தர்மசிறி லியனகே அல்லது “எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களை கல்கிஸ்ஸ பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியகம் கைது செய்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 3 வாள்கள், 25 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 15 கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் மொரட்டுவ, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுகளில் “எல்டோ தர்மே” இன் எதிரித் தரப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதல்கள் அனைத்தும், அவரது நெருங்கிய சகாக்களில் ஒருவரான துமிந்து என்பவரின் வழிகாட்டலிலேயே இக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கடந்த ஜனவரி 26 ஆம் திகதி மொரட்டுவ பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் ஒருவர் மீது வாள் வீச்சுத் தாக்குதல் நடத்தி அவருக்குப் பாரிய காயங்களை ஏற்படுத்தியதும் இக்குழுவே என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ரத்மலானை மற்றும் அங்குலானை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த மேலதிக விசாரணைகளை கல்கிசை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.

 

 

Share
தொடர்புடையது
சமிந்த குலரத்ன
இலங்கை

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில்...

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது.

நேற்று இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த...

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்....

liver
இலங்கை

இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தாக்கம்.

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க, இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த...