grok
செய்திகள்உலகம்

எக்ஸ் தளத்தின் Grok AI மீது ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி விசாரணை: சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு!

Share

ஈலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘எக்ஸ்’ (X) தளத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான ‘Grok’, பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களை ஆபாசமான முறையில் மாற்றியமைப்பதாகக் கூறப்படும் பாரிய குற்றச்சாட்டு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சுவீடன் நாட்டின் துணைப் பிரதமர் எப்பா புஷ் (Ebba Busch), தானும் இவ்வாறான தரம் தாழ்ந்த ‘டீப்ஃபேக்’ (Deepfake) பாதிப்புக்கு உள்ளானதாகத் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் Grok மென்பொருள் மூலம் சுமார் 30 இலட்சம் பாலியல் ரீதியான புகைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஆயிரக்கணக்கானவை சிறுவர்களுடையவை என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின்’ (Digital Services Act – DSA) கீழ் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. Grok தொழில்நுட்பத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை ‘X’ நிறுவனம் முன்கூட்டியே கணித்து, அதைத் தடுக்கச் சரியான நடவடிக்கைகளை எடுத்ததா என்பது குறித்து ஐரோப்பிய ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

இத்தகைய தவறுகள் தொடர்ந்தால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் ‘X’ தளத்தையே முழுமையாகத் தடை செய்யும் அதிகாரம் ஒன்றியத்திற்கு உண்டு. எனினும், முதற்கட்டமாகப் பாரிய அபராதம் விதிக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகப் பூசல்கள் காரணமாக இந்த விசாரணை ஆரம்பத்தில் தாமதமானாலும், தற்போது தனது பிரஜைகளின் பாதுகாப்பிற்காக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனிநபர் உரிமைகளை மீறுவோருக்கு எதிராக எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, உலகளாவிய ரீதியில் ஒரு முக்கிய முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...