download 4
செய்திகள்இலங்கை

ஊரடங்கை மீறிவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி பணிப்பு!!

Share

ஊரடங்கை மீறிவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி பணிப்பு!!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பொலிஸ்மா அதிபருக்கு பணித்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் சிறப்புச் சந்திப்பில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மேலும், இதுவரை கொரோனாத் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செப்ரெம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் இவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

பிரதேச செயலாளர், உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கிராமப்புற கொரோனாக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் என்பவை இணைந்து தடுப்பூசி ஏற்றாதவர்களை அடையாளம் கண்டு, தடுப்பூசிக்கு எதிர்வரும் திங்கட்கிழமை 23ஆம் திகதிக்கு முன்னர் சுகாதாரப் பிரிவுக்கு அறிக்கை வழங்க பணிக்கப்பட்டுள்ளது.

1906 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது தேசிய கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணிக்கு அழைப்பதன் மூலமும் தடுப்பூசி பற்றுக்கொள்வதற்கு பதிவுசெய்ய முடியும்.

இந்தத் தடுப்பூசித் திட்டத்தை இராணுவத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களின் படி மேற்கொள்வது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...