உலகின் முதலாவது DNA COVID தடுப்பு மருந்து கண்டுப்பிடிப்பு! – இந்தியா அறிவிப்பு

modi

உலகின் முதலாவது DNA COVID தடுப்பு மருந்தை இந்தியா உருவாக்கியுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த DNA தடுப்பு மருந்தை 12 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் செலுத்தமுடியும் என பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு முன்வருமாறும் அதற்கான வளங்களும் வசதிகளும் தம்மிடம் காணப்படுவதாகவும் உலகநாடுகளுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Exit mobile version