இ.போ.ச. பஸ் சாரதி, நடத்துநர்கள் 29 பேருக்குத் தொற்று!!

Baticaloa Depot

இ.போ.ச. பஸ் சாரதி, நடத்துநர்கள் 29 பேருக்குத் தொற்று!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நிலைமை அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையில் கொரோனாத் தொற்றாளர்கள் 29 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்த பஸ் டிப்போ மூடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் எட்டு நோயாளர்கள் எழுமாறாக இனங்காணப்பட்ட நிலையில், டிப்போவில் கடமையாற்றும் 180 பேர் நேற்றையதினம் அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது 21 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து, அந்த டிப்போவில் தொற்றாளர்களது எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது என்று மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிரிசுதன் தெரிவித்தார்.

அதையடுத்து அந்த டிப்போ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அதில் கடமையாற்றுவோர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version