இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

bk7qlddg hamas afp 625x300 19 February 25

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுவதை உறுதிப்படுத்தும் விதமாக, இஸ்ரேலிய வீரர் ஒருவரின் உடலை ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினரால் ஒப்படைக்கப்பட்ட அந்த உடல், கடந்த 2024ஆம் ஆண்டு காஸாவில் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு வீரருடையது என்று இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த உடல் ஒப்படைக்கப்பட்டதற்குப் பதிலாக, இஸ்ரேலிலிருந்த 15 பாலஸ்தீனியர்களின் உடலங்களை அந்த நாட்டு அரசு காஸாவுக்கு அனுப்பியதாகக் காஸா சுகாதாரத் துறை அமைச்சு நேற்று (நவம்பர் 10) தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் 20 அம்ச போர் நிறுத்தத் திட்டம் காஸாவில் கடந்த மாதம் 10ஆம் திகதி அமுலுக்கு வந்ததிலிருந்து, இதுவரை சடலப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுவரை 24 பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்துள்ளனர். பதிலுக்கு, 315 பாலஸ்தீனியர்களின் உடல்களை இஸ்ரேல் திருப்பி அனுப்பியுள்ளது.

Exit mobile version