இன்று மட்டும் 2,428 பேருக்கு தொற்று!!
இலங்கையில் இன்று இதுவரை 2 ஆயிரத்து 428 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 34 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய, கடந்த வாரம் 24 ஆயிரம் நோயாளர்களும் 918 மரணங்களும் பதிவாகியுள்ளன.
கடந்த வருடம் 24 ஆயிரம் நோயாளர்கள் பதிவாகியமையானது, அதற்கு முன்பான ஒரு வாரத்துடன் ஒப்பிடுகையில் 34 வீத அதிகரிப்பையும், 918 மரணங்களானது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 60 வீத அதிகரிப்பாகவும் பதிவாகியுள்ளது.
Leave a comment