இனி வீட்டு வேலைகளுக்கு ‘ஹுமாயுனோய்டு’ ரோபோக்கள்: சிலிக்கான் வேலியில் தீவிரமடையும் தயாரிப்புப் பணிகள்!

23858849 newproject 2025 12 28t112541304

வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்வதற்கான மனித ரொபோக்களை தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவின் சிலிக்கன் வெலி தொழில்நுட்ப நகரில் இடம்பெற்று வருகின்றன.

ஏற்கனவே Eggie, Neo, Isaac and Memo என்ற பெயர்களில் வீட்டு வேலைகளை செய்வதற்கான ரொபோக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

எனினும் சமையலறையில் பீங்கான்களை கழுவுதல், ஆடைச் சலவை போன்ற மந்தமான வேலைகளையும் செய்வதற்கான ரொபோக்களை உருவாக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாகும் இந்த ரொபோக்கள் இந்த வருடம் மக்களின் வீட்டு பாவனைக்கு வருமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சிலிக்கன் வெலி தொழில்நுட்ப நகரில் ரொபோக்களை குறித்த வேலைகளை செய்வதற்கென துரிதமாக்கும் பணிகளும் இடம்பெறுகின்றன. வீட்டுப் பயன்பாட்டிற்கு மனித உருவ ரொபோக்கள் உள்ளமை வழமையான ஒன்றாக மாறிவிட்டது.

எனினும் அவற்றின் செயற்பாடுகளின் நேரத்தில் தாமதம் நிலவுகிறது. புதிதாக உருவாகவுள்ள வீட்டு ரொபோக்கள் செய்யும் பணியை வேகமாக செய்ய வைப்பதற்கான தொழில்நுட்ப உத்திகள் பயன்படுத்தப்படவுள்ளமை இதிலுள்ள விசேட அம்சமாகும்.

இப்பொழுதுள்ள மக்களிடம் பிரதானமாக இரு ஆசைகள் உள்ளன. ஒன்று வீடு மற்றையது கார். எனினும் எதிர்காலத்தில் குறித்த ஆசைகள் மூன்றாக மாறும். வீடு, கார் மற்றும் ரொபோ என AI தொழில்நுட்ப நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Exit mobile version