செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு: 2026-ல் 220 பில்லியன் ரூபாய் மேலதிக செலவு – அமைச்சரவை அறிவிப்பு!

Share

மருத்துவர்கள் உட்பட முழு அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான அடிப்படை வேதன உயர்வை வழங்குவதற்காக அரசாங்கத்திற்கு மேலதிகமாக 220 பில்லியன் ரூபாய் செலவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளார் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2027 ஆம் ஆண்டில் அரச பணியாளர்களுக்கான வேதனத்துக்காக 330 பில்லியன் ரூபாய் செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கம், இந்த மாதம் மருத்துவர்கள் உட்பட நாட்டின் அனைத்து அரச பணியாளர்களுக்கும் அடிப்படை வேதன உயர்வை வழங்கியுள்ளது.

அந்த அடிப்படை வேதன உயர்வுக்காக மாத்திரமே இந்த ஆண்டு 220 பில்லியன் ரூபாய் செலவாகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் 110 பில்லியன் ரூபாய் செலவானதுடன், இந்த ஆண்டு 220 பில்லியன் ரூபாய் செலவாகிறது.

2027 ஆம் ஆண்டில் 330 பில்லியன் ரூபாய் செலவாகும் என்பதுடன், இது இந்த வேதன உயர்வுக்காக மாத்திரமே செலவிடப்படவுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கப்பட்ட அடிப்படை வேதனத்துக்கு ஏற்ப மேலதிக நேரக் கொடுப்பனவுகள், மேலதிக கொடுப்பனவுகள், விடுமுறை நாள் கொடுப்பனவுகள் அதிகரிக்கும்.

நாட்டின் பொருளாதார நிலைக்கு ஏற்ப இவற்றைச் செய்ய முடியும் என்றும் அமைச்சரவை பேச்சாளார் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...