அமெரிக்காவில் கிரீன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி: மார்ச் 1 முதல் அரசு வணிகக் கடன்கள் ரத்து!

26 69820b5b1bedb

அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்களாக (Green Card Holders) இருப்பவர்கள், இனிவரும் காலங்களில் அரசு உதவிபெறும் வணிகக் கடன்களைப் பெற முடியாது என அமெரிக்க சிறுதொழில் நிர்வாகம் (SBA) அதிரடியாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ‘அமெரிக்கா முதன்மை’ (America First) பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் இவ்விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள்:

வணிகக் கடனுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் அனைவரும் 100 சதவீதம் அமெரிக்கக் குடிமக்களாகவோ அல்லது அமெரிக்கத் தேசியவாதிகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

இதற்கு முன்னர் ஒரு நிறுவனத்தில் 5 சதவீதம் வரை வெளிநாட்டினர் அல்லது கிரீன் கார்ட் வைத்திருப்பவர்கள் பங்கு வைத்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்த நடைமுறை தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் இனி அரசு வழங்கும் மானியங்கள் அல்லது சலுகை அடிப்படையிலான எவ்வித வணிகக் கடன்களையும் பெற முடியாது.

இந்த அறிவிப்பினால் அதிக பாதிப்பைச் சந்திக்கப்போகும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

2024 தரவுகளின்படி, கிரீன் கார்ட் பெற்றவர்களில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவின் சிறுதொழில் உரிமையாளர்களில் 40 சதவீதம் பேர் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால், இந்த நடவடிக்கை அமெரிக்கப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தைச் செலுத்தும் என அஞ்சப்படுகிறது.

பல ஆண்டுகளாக அமெரிக்கப் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கி வரும் சிறுதொழில் முனைவோரின் வளர்ச்சியை இந்த நடவடிக்கை முடக்கும் எனப் புலம்பெயர்ந்த சமூகத்தினர் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

 

 

Exit mobile version