அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

landslide 1

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 203 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (29) இரவு 8.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி, 25 மாவட்டங்களைச் சேர்ந்த 234,503 குடும்பங்களைச் சேர்ந்த 833,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், 34,119 குடும்பங்களைச் சேர்ந்த 122,822 பேர் தற்போது 919 பாதுகாப்பான நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version