நாட்டில் மேலும் பல நகரங்கள் முடக்கம்!!

cur

நாட்டில் மேலும் பல நகரங்கள் முடக்கம்!!

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேலும் பல நகரங்கள் முடக்கப்படவுள்ளன.

நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை நகரங்கள் நாளை தொடக்கம் வருகின்ற 25 ஆம் திகதிவரை முடக்கப்படவுள்ளன.

அத்துடன் நாளை மறுதினம் தொடக்கம் சியம்பலாண்டுவ நகரமும் மூடப்படுகின்றது.

அதேபோல, நுவரெலியா – வெளிமட நகரமும் நாளை தொடக்கம் 26 ஆம் திகதி வரை மூடப்படுகிறது.

மேலும் காலி – கம்புறுப்பிட்டிய நகரமும் நாளைமறுதினம் தொடக்கம் 25 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் பரவலுக்கு மத்தியில், கொழும்பு – 12 பகுதியிலுள்ள அனைத்து இரும்பு பொருள் (ஹார்ட்வெயார்) மொத்த விற்பனை நிலையங்களையும் தற்காலிகமாக மூடுமாறு த சிலோன் ஹாட்வெயார் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version