சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்றைய (அக்டோபர் 24, 2025) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன. காலை 09.30க்கு ஆரம்பமான அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.
இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல்நேரம்விடயம்
காலை 09.30 – 10.00நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையிலான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 – 11.00வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.00 – 11.30நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.30 – மாலை 05.00மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணைகள் இடம்பெறவுள்ளது.
மாலை 05.00 – 05.30ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்தே, ஹீன்மஹத்மயா லியனகே, டிக்ஸன் ஜே. பெரேரா, மேர்வின் டீ. த சில்வா, வை.ஜீ. பத்மசிரி, ஆர்.எம்.ஆர் சூல பண்டார, மற்றும் மாணிக்கவாசகர் கனகசபாபதி ஈழவேந்தன் ஆகியோருக்கான அனுதாபப் பிரேரணைகள் இன்று இடம்பெறவுள்ளது.

