IMG 5141
செய்திகள்இலங்கை

செஞ்சோலை நினைவேந்தலுக்கு இராணுவத்தினர் தடை!!

Share

செஞ்சோலை நினைவேந்தலுக்கு இராணுவத்தினர் தடை!!

முல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு விமானப் படையினரின் தாக்குதலில் உயிரிழந்த சிறார்களை நினைவுகூரச் சென்ற பெற்றோர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு இதேநாள் இலங்கை விமானப் படை நடத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், செஞ்சோலை வளாகத்துக்குச் சென்ற பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று காலை செஞ்சோலை வளாகத்துக்கு செல்லும் வள்ளிபுனம் இடைக்கட்டு வீதி முழுவதும் இராணுவம், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

பூக்கள், மாலைகளோடு அஞ்சலி செலுத்த வந்த பெற்றோர் ஏமாற்றத்துடன் திருப்பி்ச் சென்றுள்ளனர். அந்த வீதியால் செல்பவர்கள் பொலிஸார், இராணுவத்தினரால் விசாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...