கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி: e-Gate இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று முதல் திறப்பு!

Screenshot 2026 01 28 at 5.38.41 PM 1024x681 1

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் குடிவரவு நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில், நான்கு புதிய இலத்திரனியல் நுழைவாயில்கள் (e-Gates) இன்று முதல் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அதிகாரி ஜூட் பெர்னாண்டோ இது தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிட்டுள்ளார்:

இந்த நவீன ‘இலத்திரனியல் நுழைவாயில்கள்’ திட்டமானது ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.வருகை முனையத்தில் (Arrival Terminal) நான்கு நுழைவாயில்கள் பயணிகளின் பயன்பாட்டிற்காகத் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய முறைமையின் ஊடாக விமான நிலையத்தில் நிலவும் சில நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:

குடிவரவு அதிகாரிகளிடம் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், இலத்திரனியல் முறையில் ஆவணங்களை விரைவாகப் பரிசோதிக்க முடியும்.பயணிகளின் ஆவணப் பரிசோதனைக்கான நேரம் கணிசமாகக் குறைக்கப்படும்.

விமான நிலைய வருகை முனையத்தில் ஏற்படும் தேவையற்ற நெரிசலைக் கட்டுப்படுத்த இது பெரிதும் உதவும்.

இலங்கையின் பிரதான நுழைவாயிலான கட்டுநாயக்க விமான நிலையத்தை நவீனமயப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர் ஊழியர்களுக்குப் பெரும் வசதியாக அமையும் எனத் தலைமை அதிகாரி ஜூட் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

Exit mobile version