ஒட்சிசன் சிலிண்டர்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி!

hemantha herath

ஒட்சிசன் சிலிண்டர்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி!

நாட்டில் டெல்டா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஒட்சிசன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாடுகளிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்ட்டுள்ளது என்று பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது தேவையான அளவு ஒட்சிசன் சுகாதாரத்தரப்பிடம்  கையிருப்பில் உள்ளது.எனினும் நாட்டில் டெல்டா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படலாம். இதனாலேயே வெளிநாடுகளிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குமதிசெய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போதுள்ள நிலைமை மோசமடைந்தால் சுகாதாரத் தரப்பினர் இறுக்கமான கோரிக்கைகளை முன்வைப்பர். இதனால் அதிரடித் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர் இத்தகைய சூழ்நிலையில் சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

 

Exit mobile version