எப்ஸ்டீன் விமானத்தில் பயணம்: அவர் எனது நண்பர் அல்ல – தீபக் சோப்ரா விளக்கம்!

vikatan 2026 02 05 b52destm Deepak Chopra

அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்களில் தீபக் சோப்ராவின் பெயர் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் இது குறித்த தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

1990-களின் நடுப்பகுதியில் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்குச் சொந்தமான தனிப்பட்ட விமானத்தில் (Lolita Express என அறியப்படுவது) தீபக் சோப்ரா பயணித்ததாகப் பதிவேடுகள் காட்டுகின்றன. அந்தப் பயணங்களின் போது சிறுமிகள் தொடர்பான சில மின்னஞ்சல் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துத் தீபக் சோப்ரா வெளியிட்டுள்ள விளக்கத்தில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனக்கு ஒரு நண்பரோ அல்லது நெருக்கமானவரோ அல்ல. அவருடன் எந்தவிதமான தனிப்பட்ட அல்லது தொழில்முறை தொடர்பும் இருந்ததில்லை.

ஒரு பொதுவான நண்பரின் அழைப்பின் காரணமாகவே அந்த விமானத்தில் ஒருமுறை பயணித்தேன். அப்போது எப்ஸ்டீனின் கறுப்புப் பக்கங்கள் அல்லது அவரது குற்றச்செயல்கள் பற்றி எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

தற்போது பரவி வரும் மின்னஞ்சல் தகவல்கள் தவறாகத் திரித்துக் கூறப்படுகின்றன. எப்ஸ்டீனின் சட்டவிரோதச் செயல்களுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

எப்ஸ்டீன் வழக்கில் அரசியல் தலைவர்கள் மற்றும் ஹாலிவுட் பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில், அமைதி மற்றும் ஆன்மீகத்தைப் போதிக்கும் தீபக் சோப்ராவின் பெயர் இதில் இழுக்கப்படுவது உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

 

 

 

Exit mobile version