இணையத்தில் விறகு கொள்வனவு! – நம்ம நாட்டில தான்.
இலங்கையின் பிரபல இணையதளமான கப்ருகா.கொம் (kapruka.com) மூலமாக மக்கள் தற்போது விறகு கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இணையத்தளத்தில் மண் அடுப்பு ஒன்றுடன் 5kg விறகு ஒரு கட்டு ரூபா 390.00 என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் தற்போது இணையத்தளம் மூலம் விறகு கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இந்த இணையத்தளம் மூலம் 1000 த்துக்கும் அதிகமான விறகு கட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்த இணையத் தளத்தின் நிறுவுநரான துலித் ஹேரத், “நாங்கள் இணையத்தளம் மூலம் விறகு விற்பனை செய்வோம் என கற்பனைகூட செய்து பார்த்தது இல்லை. ஆயினும் விறகுகள் எதிர்பார்த்ததைவிட வேகமாக விற்கப்படுகின்றன” என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://www.kapruka.com/shops/deliveryProductPreview.jsp?id=grocery002049
Leave a comment