நடிகர் யாஷின் ரொமான்டிக் லுக் இப்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.
‘கேஜிஎப்’ திரைப்படத்துக்காக கடந்த சில ஆண்டுகளாக நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் வலம்வந்தவர் நடிகர் யாஷ். இவர் தற்போது தலைமுடி , தாடி வெட்டி புதிய தோற்றத்தில் மாறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
2018 இல் வெளியான ‘கேஜிஎப்’ மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், அண்மையில் வெளியான ‘கேஜிஎப்-2’ பாகமும் உலகம் முழுதும் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.
இந்த நிலையில் தனது அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார் யாஷ். தனது தலைமுடி மற்றும் தாடியை குறைத்து புதிய ஸ்மார்ட் லுக்கிற்கு மாறியுள்ள யாஷின் வீடியோ ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவில் தலைமுடி வெட்டி புதிய தோற்றத்துக்கு மாறிய யாஷ் தாடி கட் பண்ணும் போது கொடுத்த ரியாக்ஷன் வேற லெவல்.. யாஷ் வெட்டியா தாடியை சோகத்துடன் பார்த்துக்கொண்டிருக்க அவரை சுற்றி உள்ளவர்களும் அவரது மனைவியும் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்.
புதிய லுக்கில் உள்ள யாஷை கன்னத்தில் கிள்ளி ரசிக்கும் அவரது மனைவி இன்னும் கியூட் தான் போங்க.
#Cinema
Leave a comment