திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்! – உதயநிதி அதிரடி

wp7849047

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இன்றையதினம் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.

அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கையில்,

“இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுகிறேன். ‘மாமன்னன்’ திரைப்படம் தான் எனது கடைசி திரைப்படம்.” என்று கூறினார்.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#India

Exit mobile version