தொடர்ந்து வெற்றிப் படங்களை அள்ளிக் கொடுக்கும் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தை அடுத்து லைகா உடன் இணைந்து சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் உருவாக்கும் ‘டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஐஸ்வர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய் , முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.
கல்லூரி மாணவனாக உடல் எடையை குறைத்து நடித்து வரும் சிவகார்த்திகேயனின் டான் ஜோடி யாரென ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.
இந்நிலையில் நேற்றையதினம் நடிகை பிரியங்காவுக்கு இருபத்து ஆறாவது பிறந்தநாள்.
இதனை முன்னிட்டு படத்தின் இயக்குனர் சிபி பிரியங்காவின் கதாபாத்திர பெயரை வெளியிட்டுள்ளார்.
இத் திரைப்படதில் அங்கயற்கண்ணி எனும் பெயரில் பிரியங்கா நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.
#Cinema