Say hello to aloe MobileHomeFeature
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

சருமத்தை பொலிவுடன் வைத்து கொள்ள வேண்டுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்தி பாருங்க!

Share
கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துவது முகத்திற்கு நல்ல பலனை தருகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
Say hello to aloe MobileHomeFeature
  • கற்றாழையை நன்றாகத் தோல் சீவி, ஆறேழு முறை நீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளவும். அதனுடன் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து ஜூஸாக சாப்பிட்டால்,  மாதவிடாய் வயிற்றுவலி குறையும்.
  • தோல் அரிப்புக்கு, கற்றாழை ஜெல்லை தடவிவர, அரிப்பு குணமாகும். வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப்  பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும். ஆன்டி ஏஜிங்காகவும் கற்றாழை செயல்படும்.
  • கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப்பருவினால் ஏற்படும் அழற்சிகள் நீங்கும்.
  • கற்றாழையின் சதைப்பகுதியை  தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.
  • முகத்துக்கு பூசும் கிரீம்கள், நகத்துக்கு பூசும் நகப்பூச்சு பொன்றவை இந்த கற்றாழையில் இருந்துதான் பெறப்படுகிறது.  முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சருமநோய் எதுவாக இருந்தாலும் சிறிது  கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
  • சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்று கூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நேரம் எதிர்ப்பு சக்தியை கற்றாழை வழங்குகிறது.
    #Beautytips

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...

07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....