வெயில் காலத்தில் உடல் சூட்டை குறைக்க ஒரு சில வழிகள் உள்ளது.
உடல் அதிகமாக சூடாகிவிட்டால் சில உபாதைகளை சந்திக்க நேரிடம். உதாரணமாக சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சூடு கட்டி, சளி போன்ற பிரச்னைகளை சந்திக்கலாம்.
எனவே இந்த பிரச்சினையிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
- வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு நல்லெண்ணெய் ஊறவைத்து தலைக்கு குளிக்க வேண்டும். உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
- இரவில் சரியான தூக்கம் அவசியம். பித்தம் அதிகரித்தால் உடல் சூடு அதிகரிக்கும்.
- காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வெந்தயம் விழுங்கி வந்தால் உடல் சூட்டை எளிதாக தணிக்கலாம். வெந்தயம் உடல் சூட்டை தணிப்பதுடன் மலசிக்கல் பிரச்சனைக்கும் தீர்வாக அமைகின்றது.
- தர்ப்பூசணி உடலில் நீர் வறட்சியை போக்க அதிக நீர்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். உடல் வறட்சியை போக்கவும் உடல் உஷ்ணத்தை போக்கவும் தர்ப்பூசணி அற்புதமான பழம்.
- முலாம் பழம் அதிக குளிர்ச்சியான பழம் என்பதால் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெள்ளரி உடல் சூட்டை குறைப்பதுடன் இதில் அதிகம் உள்ள நார்சத்துக்கள் செரிமானத்தையும் எளிதாக்கும். - சிலருக்கு உடல் இயற்கையாகவே உஷ்ணமாக இருக்கும் அவர்கள் வெறும் வயிற்றில் இளநீர் குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதுடன் புத்துணர்சியாகவும் இருக்கும்.
- நொங்கில் நீர்சத்துக்கள் மட்டுமல்லாமல் கனிம சத்துக்களும் நிறைந்துள்ளன. நொங்கு உடல் சூட்டை தணிப்பதுடன் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது.
#LifeStyle
Leave a comment