2017 12image 16 44 005951070thineyebrows ll
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

அடர்த்தியான புருவங்கள் வேண்டுமா? இதோ சில அழகு குறிப்புக்கள்

Share

பொதுவாக கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையானால் அது கண்களில் அழகையும் கெடுத்து விடும்.

புருவங்கள் சிலருக்கு என்ன செய்தாலும் வளராது. அவர்கள் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட எண்ணெய்களை வாங்கிப்போடுவதுண்டு. இருப்பினும் இது தற்காலிகம் தான்.

புருவங்களை அடர்த்தியாக எளிய முறையில் ஒரு சில இயற்கை வழிகள் உள்ளது. தற்போது அவற்றை பார்ப்போம்.

  • தேங்காய்  இந்த எண்ணெய்யை தினமும் புருவங்களின் மீது தடவி வர, அந்த பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மயிர்கால்கள் வலுபெற்று புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.
  • விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் புருவங்களில் உள்ள முடிகள் நன்கு அடர்த்தியாக வளரும். தொடர்ந்து 1 மாதம் பின்பற்றி வந்தால், உங்கள் புருவ அமைப்பில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். உடலும் குளிர்ச்சி அடையும்.
  • தினமும் இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெயை புருங்களில் மென்மையாக தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் புருவ வளர்ச்சி தூண்டப்படும்.
  • கற்றாழை ஜெல்லை இரவு படுக்கும் முன் புருவங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், புருவங்கள் அடர்த்தியாக வளர்வதைக் கண்கூடாக காணலாம்.
  • முட்டையின் மஞ்சள் கருவை புருவங்களின் மீது தடவி 15- 20 நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 2 வாரத்திற்கு காலத்திற்கு செய்து வந்தால், புருவங்கள் நன்கு வளர்ந்திருப்பதைப் காண முடியும்.
  • வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, பின்பு பேஸ்ட் போல அரைத்து, புருவங்கள் மீது தடவி 20 நிமிடம் வரை ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர்வதை காணலாம்.
#Eyebrows #BeautyTips

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
124759403
பொழுதுபோக்குசினிமா

இசையமைப்பாளர் தேவாவின் தம்பி சபேஷ் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும், இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. சென்னை,...

44036824 9
பொழுதுபோக்குசினிமா

“டிரோல்களால் மலையாளப் படங்களில் நடிக்கப் பயந்தேன்”: நடிகை அனுபமா பரமேஸ்வரன் உருக்கம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர்...

124750333
பொழுதுபோக்குசினிமா

மாரி செல்வராஜ் – துருவ் விக்ரமின் ‘பைசன்’ திரைப்படம்: 6 நாட்களில் ரூ. 40 கோடி வசூல் சாதனை!

‘பரியேறும் பெருமாள்’, ‘மாமன்னன்’, ‘கர்ணன்’ போன்ற படங்களை இயக்கி மக்களின் கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் மாரி...

MixCollage 22 Oct 2025 09 19 AM 8391
பொழுதுபோக்குசினிமா

ஓராண்டுக்குப் பிறகு மகளின் முகத்தை வெளிப்படுத்திய தீபிகா – ரன்வீர் ஜோடி

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கைக் காதலித்து...