சினிமாபொழுதுபோக்கு

சாப்பிட கூட வழி இல்லை.. சந்தித்த பணக்கஷ்டம்! மேடையில் கண்ணீர் விட்ட விஜய் டிவி மணிமேகலை

Share
24 6604643c5ccc3
Share

சாப்பிட கூட வழி இல்லை.. சந்தித்த பணக்கஷ்டம்! மேடையில் கண்ணீர் விட்ட விஜய் டிவி மணிமேகலை

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பிரபலம் ஆனவர் மணிமேகலை. அவர் ஹுசைன் என்ற டான்சரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் வேறு மதம் என்பதால் மணிமேகலை வீட்டில் ஒப்புதல் இல்லை.

வீட்டை எதிர்த்து தான் மணிமேகலை ஹுசனை திருமணம் செய்துகொண்டார். அந்த நேரத்தில் அவர்கள் மதத்தை வைத்து சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ட்ரோல்கள் வந்தது.

தற்போது பல வருடங்கள் கழித்து தான் அவரது அம்மா மட்டும் மணிமேகலை உடன் பேச தொடங்கி இருக்கிறாராம்.

மணிமேகலை தான் காதல் திருமணம் செய்த புதிதில் பட்ட கஷ்டம் பற்றி பேசி இருக்கிறார். நான் அம்மா வீட்டில் இருக்கும்போது ஒருரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன், என் காருக்கு கூட வீட்டில் தான் பெட்ரோல் போடுவார்கள்.

ஆனால் காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. பணம் மொத்தமும் அம்மா வீட்டில் லாக் ஆகிவிட்டது.

அந்த மாதம் வேலைக்கு சென்றால் தான் சம்பளம் என்ற நிலையில் இருந்தோம். சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருந்திருக்கிறோம். க்ரூப் டான்சரான ஹுசைனுக்கு மாதம் 15 ஆயிரம் வரும், எனக்கும் குறைந்த சம்பளம் தான்.

முதல் மாதமே ஹுசைனின் மோதிரத்தை அடகு வைத்துவிட்டோம். அதை மீட்க வேண்டும் என்பதற்காக தான் நான் முதல் முறையாக ஈவென்ட் ஒன்றிற்கு சென்றேன். அது தான் என்னுடைய முதல் ஈவென்ட்.

அதன் பிறகு ஆசைப்பட்டதை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். விரைவில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க வேண்டும் என்பது தான் ஆசை என மணிமேகலை கண்ணீருடன் பேசி இருக்கிறார்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...