அர்ச்சனாவுக்கு ஓட்டுப் போட முடியல – அப்போ மாயா தான் வின்னரா?

tamilni 138

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி துவங்கிய நிலையில், அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ளது.

தற்போது மாயா, அர்ச்சனை, தினேஷ், மணி, விஷ்ணு, விஜய் வர்மா ஆகியோர் வீட்டுக்குள் இருக்கின்றனர்.இறுதி வாரத்தில் பதிவாகும் வாக்குகள் அடிப்படையில் தான் ஷோவின் வெற்றியாளர் யார் என்கிற அறிவிப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட பைனல் விழாவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

மேலும் தற்போது இருக்கும் போட்டியாளர்களுக்கு அவர்களது ரசிகர்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.ஹாட்ஸ்டார் தளம் மூலமாக தினமும் வாக்களிக்க முடியும் என்ற நிலையில் போட்டியாளர்களுக்கு missed call மூலமாகவும் வாக்களிக்கலாம் என விஜய் டிவி ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு தனித்தனி நம்பர் அறிவித்து இருக்கிறது.

இந்நிலையில் அர்ச்சனாவுக்கு மட்டும் missed call மூலம் வாக்களிக்க முடியவில்லை, Wrong number என வருகிறது என தற்போது ரசிகர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இதனால் மாயா தான் டைட்டில் வின்னர் ஆவாரோ என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version