தளபதி குறித்து ‘பீஸ்ட்’ நாயகி பூஜா ஹெக்டே கூறிய வார்த்தை தளபதி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
விஜய் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு இணங்க பூஜா ஹெக்டே தளபதி குறித்து தெரிவித்துள்ளார். அந்த வார்த்தையே இப்போது வைரலாகி வருகிறது.
ரசிகரின் வேண்டுகோளுக்கு பூஜா ஹெக்டே பதிலளிக்கையில்,
‘விஜய் பற்றி ஒரே ஒரு வார்த்தையில் கூறுவது ரொம்ப கஸ்ரம். ஆனால் முயற்சி செய்கிறேன். அவரைப் பற்றி கூறுவதாயின் ’இனிமையானவர்’ என்று தெரிவித்துள்ளார்.
விஜய் குறித்து தெரிவித்துள்ள பூஜாவின் இந்த பதில், தற்போது தளபதி ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக கைகோர்த்துள்ளார் பூஜா ஹெக்டே. இந்த படத்தைத் தொடர்ந்து அவர் தமிழ் படங்களில் பிஸியாவார் என தெரிவிக்கப்படுகிறது.