tamilnih scaled
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘கோட்’ படத்தில் திடீரென என்ட்ரியான த்ரிஷா

Share

விஜய்யின் ‘கோட்’ படத்தில் திடீரென என்ட்ரியான த்ரிஷா

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பார்வதி என நான்கு நாயகிகள் நடந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை த்ரிஷா நடித்திருப்பதாகவும் அவருடைய காட்சி இரண்டு நாட்கள் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த படத்தில் விஜய், அப்பா, மகன் என இரண்டு வித்தியாசமான வேடத்தில் நடித்து வரும் நிலையில் ஒரு வேடம் நெகட்டிவ் வேடம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் அப்பா கேரக்டர் தான் நெகட்டிவ் வேடம் என்றும் அவருக்கு ஜோடியாக தான் த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு இரண்டு நாட்கள் ரகசியமாக நடந்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’லியோ’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்த நிலையில் தற்போது மீண்டும் விஜய்க்கு ஜோடியாக அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி விஜய் மற்றும் த்ரிஷா ஆகிய இருவருக்கும் ஒரு சின்ன பாடல் இருப்பதாகவும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே இருக்கும் இந்த பாடலின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் ஒரு சயின்டிஃபிக் பீரியட் ஆக்சன் படம் என்றும் இதுவரை விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...