ரசிகையின் செயலால் கண்கலங்கி நின்ற விஜய் தேவர்கொண்டா! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

தெலுங்கு, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் தேவர்கொண்டா உள்ளார்.

இவரின் குஷி, லைகர் மற்றும் ஜன கன மன ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் லைகர் படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடந்து கொண்டிருந்தபோது அவரை சந்திப்பதற்காக இரண்டு ரசிகைகள் வந்தனர்.

அதில் மும்பையை சேர்ந்த டாக்டர் செர்ரி என்பவர் தனது அபிமானத்தை வெளிப்படுத்துவதற்காக விஜய் தேவரகொண்டாவின் உருவத்தை தனது முதுகில் டாட்டூவாக குத்திக்கொண்டுள்ளார்.

நேரில் வந்த அந்த ரசிகை விஜய் தேவரகொண்டாவை பார்த்த பிரமிப்பில் பேச்சு வராமல் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் அந்த ரசிகை டாட்டூ வரைந்து இருப்பதை காட்டியதும் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இப்படியும் ஒரு ரசிகையா என ஆச்சரியப்பட்டுப் போன விஜய் தேவரகொண்டா கண்கலங்கியபடி நின்ற அந்த ரசிகையை மெல்ல அரவணைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பித்தக்கதாகும்.

 #VijayDevarkonda

Exit mobile version