இனி சமந்தாவும் வேண்டாம், ராஷ்மிகாவும் வேண்டாம். நொந்து நூலாகி போன விஜய் தேவரகொண்டா.!
அடுத்தடுத்து மூன்று தொடர் தோல்வி படங்களை கொடுத்த விஜய் தேவரகொண்டா தனது தோல்விக்கு சமந்தா மற்றும் ராஷ்மிகா தான் காரணம் என்று முடிவு செய்து இனிமேல் சமந்தாவும் வேண்டாம் ராஷ்மிகாவும் வேண்டாம் என்று அதிரடி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வந்து கொண்டிருந்த விஜய் தேவரகொண்டா ’கீதா கோவிந்தம்’ ’நோட்டா’ ’டாக்சி வாலா’ ’டியர் காம்ரேட் ’உள்ளிட்ட தொடர் ஹிட் படங்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் ’லைகர்’ ’குஷி தி’ ’தி ஃபேமிலி ஸ்டார்’ ஆகிய மூன்று படங்கள் சமீபத்தில் வெளியாகி மூன்றுமே படுதோல்வி அடைந்ததை அடுத்து விஜய் தேவரகொண்டா கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கடைசியாக வெளிவந்த ’குஷி’ மற்றும் ’தி ஃபேமிலி ஸ்டார்’ படங்களின் தோல்விக்கு காரணம் அந்த படங்களின் கதை, திரைக்கதை சரியில்லை என்பதை உணராத விஜய் தேவரகொண்டா, தன்னுடன் நடித்த சமந்தா மற்றும் ராஷ்மிகாவுடன் ஆன காதல் தான் காரணம் என்று தவறாக புரிந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது. எனவே இனிமேல் சமந்தாவுடன் படம் நடிப்பதில்லை என்றும் ராஷ்மிகாவுடன் ஆன காதலையும் பிரேக் செய்யப் போவதாக கூறப்படுகிறது.
இனி முழுக்க முழுக்க தீவிரமாக கதையில் கவனம் செலுத்த இருப்பதாகவும் குறிப்பாக ரொமான்ஸ் படங்களில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா இனி அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான கதை அம்சத்துடன் புதிய இயக்குனர்களுடன் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.