tamilnaadi 141 scaled
இந்தியாசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

இயேசு மது குடித்தாரா? நடிகர் விஜய் ஆண்டனியால் சர்ச்சை

Share

இயேசு மது குடித்தாரா? நடிகர் விஜய் ஆண்டனியால் சர்ச்சை

நடிகர் விஜய் ஆண்டனி பத்திரிகையாளர் சந்திப்பில் இயேசு மது அருந்தியதாக குறிப்பிட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ”ரோமியோ” என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் நடந்தது. அப்போது படத்தின் போஸ்டரில் கதாநாயகி மது அருந்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, ”குடிப்பது தவறுதான். ஆண், பெண் என யார் குடித்தாலும் தவறுதான். நம் நாட்டில் நீண்ட காலமாகவே குடி உள்ளது. திராட்சை ரசம் என்ற பெயரில் ஜீசஸ் கூட குடித்துள்ளார்” என்றார்.

அவரது இந்தப் பேச்சு இணையத்தில் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் தமிழ்நாடு கிருத்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருத்தவர்களையும் இயேசு கிறிஸ்துவையும் இழிவுபடுத்தும் விதமாக, எந்த ஆதாரமும் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துவுடன் ஒப்பிட்டு ”இயேசு மது குடித்தார்” என பொது வெளியில் அவர் பேசியது மனதை புண்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...