11 17
சினிமாபொழுதுபோக்கு

அஜித்திடம் விஜய்க்கு ரொம்ப புடிச்ச விஷயம் என்ன தெரியுமா?. தளபதியே பல பேட்டிகளில் சொல்லி இருக்காரே!

Share

அஜித்திடம் விஜய்க்கு ரொம்ப புடிச்ச விஷயம் என்ன தெரியுமா?. தளபதியே பல பேட்டிகளில் சொல்லி இருக்காரே!

நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவரும் சமகாலத்து போட்டியாளர்கள் என்பதால் பெரும்பாலும் பேட்டிகளில் ஒருவரை பற்றி இன்னொருவரிடம் கேட்க மாட்டார்கள்.

அதிலும் நடிகர் அஜித்குமார் பேட்டி கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் நடிகர் விஜய் அஜித் பற்றி பேசிய பேட்டிகளின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய், அஜித் தேசிய விருது வாங்கியதற்கு எந்த ஒரு பாராட்டும் தெரிவிக்கவில்லை என இணையத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் அதற்கு பதில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவே கொடுத்திருந்தார். அது போல தான் போட்டியாளர் என்பதை தாண்டி அஜித்திடம் தனக்கு ரொம்ப பிடிச்ச விஷயத்தை பற்றி விஜய் சொல்லி இருக்கிறார்.

காபி வித் அனு நிகழ்ச்சியில் நடிகை அனுஹாசன் விஜய் இடம் அஜித்திடம் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன என்று கேட்கிறார்.

அதற்கு விஜய் அவருடைய தன்னம்பிக்கை பிடிக்கும் என்று சொல்கிறார். அதிலிருந்து ஒரு சில வருடங்கள் கழித்து விஜய் டிவி கோபிநாத் நண்பன் பட ப்ரமோஷன் விழாவை தொகுத்து வழங்குகிறார்.

அப்போது அவரும் விஜய் இடம் அஜித்திடம் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன என்று கேட்கிறார். அதற்கு விஜய் அஜித்தின் தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும் என பதிலளித்திருக்கிறார்.

ஏனோ தானோ என பதிலளித்திருந்தால் இந்த பேட்டிகளில் விஜயின் பதில் மாறி மாறி இருந்திருக்கும்.

உண்மையிலேயே அஜித்தின் தன்னம்பிக்கை பிடித்ததால் தான் விஜய் அதை ஒவ்வொரு இடத்திலும் மறக்காமல் சொல்லி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
nayanthara in
பொழுதுபோக்குசினிமா

டொக்சிக் படத்திற்காக யஷ் மற்றும் நயன்தாராவிற்கு வழங்கப்பட்ட பிரம்மாண்ட சம்பளம்!

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் KGF பட புகழ் யஷ் நடிப்பில் படு பிரம்மாண்டமாக தயாராகும் படம்...

Image
பொழுதுபோக்குசினிமா

2-வது பாதியில் ரவி மிரட்டியிருக்கிறார்: பராசக்தி படத்தைப் பார்த்துவிட்டு கெனிஷா நெகிழ்ச்சிப் பேட்டி!

சுதா கொங்கரா இயக்கத்தில், பொங்கல் வெளியீடாக இன்று திரைக்கு வந்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தில், நடிகர் ஜெயம்...

G H8X3taYAAnFzC
பொழுதுபோக்குசினிமா

டொக்சிக் படக் காட்சியால் கிளம்பிய சர்ச்சை: விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த இயக்குனர் கீது மோகன்தாஸ்!

கன்னடத் திரையுலகின் ‘ராகிங் ஸ்டார்’ யஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘டொக்சிக்’ (Toxic) படத்தின்...

dc Cover 1ai592ds09gbqlnclh85t15jq6 20181006234506.Medi
பொழுதுபோக்குசினிமா

ஜன நாயகன் தடை: கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டும் – நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம்!

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் (Censor...