10 21
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் “சச்சின்” ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு

Share

விஜய்யின் “சச்சின்” ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான படம் ‘சச்சின்’. இந்த படத்தினை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார். இந்த படத்தில் வடிவேலு, சந்தானம், பாலாஜி, ரகுவரன் நடித்து இருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் ‘சச்சின்’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், படத்தை ரீ-ரிலீஸ் செய்யப்போவதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். அதன்படி கோடை விடுமுறையில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சச்சின் படம் மீண்டும் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...