கோலிவுட்டின் பிரபலமான நட்சத்திர காதல் ஜோடியான விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இணைந்து பல படங்களை கொடுத்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள முக்கோணம் காதல் கதையான இந்த படத்தின் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரெளடி பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ள ராக்கி படத்தின் ரிலீஸ் திகதியை விக்னேஷ் சிவன் இன்று வெளியிட்டுள்ளார்.
தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்நிலையில் ராக்கி படத்தின் ஷுட்டிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் நிறைவடைந்து விட்டது.
இதனையடுத்து டிசம்பர் 23 ம் திகதி தியேட்டர்களில் இந்த படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய போஸ்டருடன் இந்த படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. உணர்வு கலந்த கேங்ஸ்டர் படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
#Cinema