வெங்கட் பிரபு – நாக சைதன்யாவுடன் இணைந்த அரவிந்த்சாமி

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார்.

தற்காலிகமாக ‘என்சி22’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பா ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இப்படத்தின் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.

மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

1792121 naga3

இந்நிலையில் என்சி22 படம் குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கதையின் மிக முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆக்‌ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பில் அரவிந்த் சுவாமி இணைந்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் கீர்த்தி ஷெட்டி, சரத்குமார் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோரும் இந்த ஷெட்யூலில் பங்கேற்று உள்ளனர்.

#cinema

Exit mobile version