வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து கையில் கேமராவுடன் விஜய் படுமாஸாக நடந்து வருவது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் விஜய் ஒரு சிறிய மாற்றம் கூட இல்லாமல் இப்பொழுதும் அதே இளமையோடு இருப்பதாக பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், வாரிசு படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், என்ன நண்பா ஹேப்பியா? இதில் உங்களுக்கு பிடித்த புகைப்படம் எது? என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
#Cinema