வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான ‘ரஞ்சிதமே’ பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இன்னொரு வெற்றிகரமான பாடல் வர உள்ளது. ‘வாரிசு’ பெல்லாரி படப்பிடிப்பில் பல நல்ல தருணங்கள் இருந்தன. எங்களை வரவேற்று ஆதரவளித்த அன்பான மக்களுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
இதற்கு இசையமைப்பாளர் தமன், “யோவ் ஜானி ரொம்ப பிரஷர் ஏத்துற” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பட்டய கிளப்புங்கள் தமன். எல்லாரும் வெயிட்டிங் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
#cinema
Leave a comment