1788610 ra
சினிமாபொழுதுபோக்கு

தளபதி ரசிகர்களுக்கு விருந்து! – மீண்டும் வெளியாகும் ‘ரஞ்சிதமே’ பாடல்

Share

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடலை கடந்த 5-ம் திகதி படக்குழு வெளியிட்டது. இப்பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தெலுங்கில் உருவாகியுள்ள ‘ரஞ்சிதமே’ பாடல் நாளை காலை 9.09 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை அனுராக் குல்கரனி மற்றும் எம்.எம்.மானசி இணைந்து பாடியுள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 38
சினிமாபொழுதுபோக்கு

த.வெ.க கொடி நிறத்தில் திரிஷாவின் உடை: ரசிகர்கள் விவாதம்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, நடிகர் விஜய் தீவிரமாகச் செயல்பட்டு வரும்...

Untitled 36
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் விஜய் – திரிஷா விவகாரம்: வைரலாகும் புதிய தகவல்கள்!

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி...

05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...