24 671cc3fb37d9e
சினிமாபொழுதுபோக்கு

என்ன 100 தடவையா.. சுற்றுலாக்கு சென்ற இடத்தில் வரலட்சுமி சரத்குமார் செய்த செயல்

Share

என்ன 100 தடவையா.. சுற்றுலாக்கு சென்ற இடத்தில் வரலட்சுமி சரத்குமார் செய்த செயல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, போடா போடி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க வந்தாலும் அதற்கு முன்பே ஏகப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்களை சில காரணங்களால் மிஸ் செய்துள்ளார்.

முதல் படமே அவருக்கு வெற்றிக்கொடுக்க அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் கடந்த மார்ச் மாதம் மும்பையை சேர்ந்து தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் திருமணம் தாய்லாந்தில் மிக நெருக்கமான குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது. அதற்கு முன் சென்னையில் மெஹந்தி, சங்கீத், வரவேற்பு நிகழ்ச்சி என பிரமாண்டமாக இந்த திருமணம் நடந்தது.

இந்நிலையில், அடிக்கடி வெளிநாடுகளுக்கு ஹனிமூன் ட்ரிப் சென்று கொண்டிருக்கும் இந்த ஜோடி தற்போது மாஹே தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வரலட்சுமி சரத்குமார் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அதில் ஒரு வீடியோவை பதிவிட்டு “மனைவி ஒரு நல்ல போட்டோ போடுவதற்கு பின்னால் கணவன் 100 போட்டோக்களையாவது எடுக்க வேண்டும் அப்போது தான் ஒரு புகைப்படமாவது அழகாக இருக்கும் என ஜாலியாக பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...